சின்னத்திரை நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் தன்னுடைய ஃபாஸ்ட் லைப் பற்றியும் தன்னைப் பற்றிய வீடியோ ஒன்று இருப்பதாகவும் தன்னுடைய உறவினர்களிடம் மிரட்டுவதாக லைவில் கூறியுள்ளார்.
மேலும் சில தினங்களுக்கு முன்பு சம்யுக்தா லைவில் விஷ்ணுகாந்த் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைத்த நிலையில் விஷ்ணுகாந்த் மீது மீண்டும் சம்யுக்தா பரபரப்பான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
சின்னத்திரையில் காதலித்து திருமணம் ஆகி இரண்டு மாதங்களுக்குள் குடும்ப பிரச்சனைகளை சமூக வலைத்தளத்தில் கொட்டும் பிரபல தம்பதிகளாக விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் இருந்து வருகின்றனர். அத்தோடு நடிகை சம்யுக்தாவிற்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் வைத்து சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அத்தோடு இந்த ஜோடியின் திருமணம் கடந்த மார்ச் மாதம் தான் நடைபெற்றது. ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இப்போது இருவரும் பிரிந்து இருக்கின்றனர். தங்களுடைய காதலையும் இதே சமூக வலைதளத்தில் தெரிவித்த ஜோடி இப்போது தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளையும் இதே சோசியல் மீடியாவில் கூறி வருகின்றனர். இவ்வாறுஇருக்கையில் இவர்கள் பற்றியும் சில மீம்ஸ்களும் வலம் வருகிறது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு சம்யுக்தாவோடு என்ன பிரச்சனை என்பது பற்றி விஷ்ணுகாந்த் சில youtube செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு விஷ்ணுகாந்த் கூறிய பதில்களுக்கு எல்லாம் நோட்டு போட்டு நோட்ஸ் எடுத்த சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் லைவில் அனைத்தையும் உடைத்து எறிந்தார். ரசிகர்களின் கேள்விகளுக்கும் விஷ்ணுகாந்த் கூறிய வார்த்தைகளுக்கும் பல பதில்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.
மேலும் சில தினங்களாக இந்த ஜோடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இவ்வாறுஇருக்கையில் இன்று விஷ்ணுகாந்த் ஆறு மணிக்கு தான் லைவ் வர போவதாக instagramல் ஸ்டோரி வைத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது 2.50 லைவ் வந்த சம்யுக்தா விஷ்ணுகாந்த் என்ன செய்யப் போகிறார் என்று நான் காத்திருந்தேன். இப்போது அவர் அவருடைய ரியாக்ஷனை தொடங்கி விட்டார். நானும் என்னுடைய ரியாக்ஷனை தொடங்க போகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
ஏனென்றால் நான் லைவ் வந்து அடுத்த நாளே என்னை பற்றி தவறுதலாக சம்யுக்தா கூறிவிட்டார் என்று என்னுடைய உறவினர் ஒருவருக்கு விஷ்ணுகாந்த் ஃபோன் செய்து என்னிடம் சம்யுக்தாவின் ஃபாஸ்ட் லைஃப் பற்றி பல விஷயங்கள் இருக்கிறது. அதுபோல சம்யுக்தா வீடியோ 4 மணி நேரமாக ஓடும் வீடியோ ஒன்றும் என்னிடம் இருக்கிறது இனி சம்யுக்தா என்ன பத்தி ஏதாவது பேசுனா அதை நான் வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
அதனால் நான் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தேன். அத்தோடு போலீஸ் விசாரிக்கும் போது கூட விஷ்ணுகாந்த் அங்கே வரவில்லை. அதனால் உங்களுக்கு சம்மன் அனுப்பி இருக்காங்க. நீங்க சம்மனையும் பெறவில்லை. இந்த நிலையில் நீங்க லைவில் என்னை பற்றி என்ன பேச போறீங்க? லைவில் என்னை பற்றி ஏதாவது தப்பா பேசினா நான் இன்னும் பெரிய பதிலடி கொடுப்பேன் என்று தெரிவித்து இருக்கிறார்.எனினும் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Listen News!