ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாலிவுட் நடிகை, இவர் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம் பெற்றதை தொடர்ந்து, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.
அதன்படி,சமீபத்தில், நடிகை ஜாக்குலின் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி சில அதிர்ச்சியான அறிக்கைகளை அளித்தார். ஜனவரி 16 ஆம் தேதி, வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி கோரி அவர், தாக்கல் செய்த புதிய மனு மீது அமலாக்க இயக்குனரகத்திடம் பதில் அளிக்க நீதிமன்றம் கோரியது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பணமோசடி வழக்கில் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டது .
தற்போது, சுகேஷ் சந்திரசேகர் தனது உணர்ச்சிகளுடன் விளையாடி வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் உறவினர் என்று அறிமுகப்படுத்தி கொண்ட சுகேஷ், தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஒன்றாக வேலை செய்வோம் என்றார். எனக்கு தினமும் 3 முறை வீடியோ கால் செய்வார்.
காலையில் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு ஒரு முறையும், பகலில் ஒரு முறையும், உறங்கச் செல்லும் முன்பு ஒரு முறையும் போனில் பேசிக்கொள்வோம். பேசும்போது ஒரு முறை கூட சிறையிலிருந்து பேசுவதாக என்னிடம் தெரிவித்ததில்லை.ஆனால் அவர் ஜெயிலில் இருந்து பேசுகிறார் என்று தெரியாது என்ற பகிர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
மேலும், தானும் சுகேஷும் கடைசியாக ஆகஸ்ட் 8, 2021 அன்று தொலைபேசி அழைப்பில் பேசியதாகவும், அதற்குப் பிறகு அவர் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகத்தின் மூத்த அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதை நான் பின்னர் தான் அறிந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் மட்டுமல்லாது அவரின் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சுகேஷ் பண உதவி செய்திருக்கிறார். இப்போது ஜாக்குலின், வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!