தமிழ் சினிமாவில் வினியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் ராஜ்கிரண். மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். பிக்சர் பொட்டியை சைக்கிளில் வைத்து கட்டிக்கொண்டு தியேட்டருக்கு கொண்டு சென்று கொடுக்கும் வேலையெல்லாம் இவர் செய்துள்ளார். இவரின் நிஜப்பெயர் மொய்தீன் அப்துல் காதர்.
திரையுலகில் இவரை காதர் பாய் என அழைப்பார்கள். ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி ராமராஜனை வைத்து ஒரு சில படங்களை தயாரித்துள்ளார்.இவர் தயாரித்த என் ராசாவின் மனசிலே படத்தில் ராமராஜன் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் ராஜ்கிரணே ஹீரோவாக நடித்தார்.
அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். தற்போது வரை அதில் கலக்கி வருகிறார்.
இவருக்கு 50 வயது இருக்கும்போது ஒரு வேலையாக மைசூருக்கு சென்றிருந்தார். அப்போது ஒரு முஸ்லீம் பெரியவர் ஒருவர் இவரை உரிமையுடன் அதட்டி கூப்பிட்டதோடு, ராஜ்கிரண் பற்றிய தகவலை அவரிடமே சொல்லி, இன்னும் 15 நாட்களில் உனக்கு திருமணம் நடக்கும் என சொன்னாராம். அவர் கூறியது போலவே ராஜ்கிரணுக்கு திருமணமும் நடந்துள்ளது. அந்த பெரியவரான சையத் பாபாவையே தனது குருவாக இப்போது ராஜ்கிரண் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Listen News!