• Sep 20 2024

உண்மையிலேயே அவர் ஒரு நைஸ் ஜென்டில்மேன்- அப்படி என்ன செய்தார் தெரியுமா அஜித்- பாராட்டிய போலீஸ் அதிகாரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவர் தனது 61 படத்தில் நடித்து வருகின்றார்.இதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இப்படத்தில் அசுரன் திரைப்பட நடிகையான மஞ்சிமா மோகன் நடித்து வருகின்றார்.இப்படத்துடன் மூன்றாவது முறையாக எச்.வினோத் மற்றும் போனிகபூருடன் கூட்டணி அமைத்துள்ளார் அஜித். அத்தோடு ஜரோப்பாவிற்கு சுற்றுலா சென்ற இவர் அண்மையில் தான் நாடு திரும்பியுள்ளார்.

இது தவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றார்.அப்படி அண்மையில் அவர் திருச்சி துப்பாக்கி சுடும் போட்டிக்கு செல்ல யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அங்கு ரசிகர்களின் கூட்டம் கூடியுள்ளது.

ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலானது. DC ஸ்ரீதேவி அவர்கள் அன்று நடந்த விஷயம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், அஜித் அவர்களிடம் ரசிகர்களை சந்திப்பது கேட்டபோது, ரசிகர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது, நீங்கள் என்ன கூறினாலும் அதை செய்கிறேன் என சார் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

கடைசியாக நன்றி கூறிய அவர் எனக்கு மட்டும் இல்லாமல் கான்ஸ்டபிள் வரைக்கும் சொன்னார். உண்மையிலேயே அவர் ஒரு நைஸ் ஜென்டில்மேன் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement