• Sep 21 2024

என்னோட முதல் கிரஷ் அவருதான்.! மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்.!யாரை சொல்லியிருக்காங்க பாருங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன்தெலுங்கில் கடைசியாக ‘வால்டர் வீரையா’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். 

கடந்த இரண்டு வருடங்களாக அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களின் மனதில் எப்போது ஒரே போலவே இருக்கிறார்.

இந்நிலையில்,  எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஸ்ருதிஹாசன் புகைப்படங்களையும். வீடியோக்களையும் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இவர் நேற்று  இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் ஒரு கேள்வி பதில் அளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் “உங்களுடைய  கிரஷ் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர் “நடிகர் ப்ரூஸ் லீ மீது தான் கிரஷ் முதலில் வந்தது என அவர் கூறி இருக்கிறார்.  இது தொடர்பாக பேசிய அவர் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே ப்ரூஸ் லீ  மிகவும் பிடிக்கும் எனவும், அவர் தான் என்னுடைய முதல் கிரஷ்” என பதிவிட்டுள்ளார்.


இதைப்போல சமீபத்தில் மற்றோரு ரசிகரும் விஸ்கி, பீர் மற்றும் காக்டெய்ல் ஆகியவற்றிற்கு இடையே மதுபானத்தை தேர்வு செய்யும்படி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் “நான் மதுவைத் தொடுவதில்லை, இவை எதுவும் எனக்குப் பிடித்தவை அல்ல” என பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement