சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், பின்னர் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. இதையடுத்து சின்னத்திரையில் இருந்து சினிமா பக்கம் சென்ற ரோபோ சங்கர் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார்.அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த படம் என்றால் அது மாரி தான். அப்படத்தில் தனுஷுடன் நடித்த பின்னர் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்த வந்தார்.
இப்படியான நிலையில் சமீபகாலமாக ரோபோ ஷங்கரின் உடல் எடை குறைந்துள்ளது. இதனால் இவருக்கு மஞ்சகாமாலை நோய் ஏற்பட்டது என்றும் இவரது அதிக குடிப்பழக்கம் தான் காரணம் என்றும் கூறப்பட்டது.ஆனால் அவர் சாதாரணமாக தான் உடல் எடையைக் குறைத்துக் கொண்டார் என்றும் அவரது மனைவி கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் தொடர்ந்து ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார்.இந்த நிலையில் ரோபோ ஷங்கர் ஒரு கொண்டாட வீட்டுக்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை பதிவிட்டு இன்னைக்கும் என்னைக்கும் நல்லா இருப்பார்... ஃபேக் நியூஸ் போடும் நாய்களுக்கு..! என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!