சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. கதை மட்டுமன்றி கதாபாத்திரங்களின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
அந்தவகையில் இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வந்திருந்தனர்.
இந்த சீரியலில் கரிகாலன் கேரக்டரில் விமல் என்பவர் நடித்து வருகின்றார். அதேபோன்று ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்திருந்தார். இவர்கள் இருவரது கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேற்றைய தினம் நடிகர் மாரிமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தமை எதிர்நீச்சல் சீரியல் குழுமத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது. இதனையடுத்து ஒவ்வொருவரும் அவருடன் இருந்த மறக்க முடியாத துயரத்தை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் விமலும் தன்னுடைய சோகத்தை கவிதை வடிவில் பதிவிட்டிருக்கின்றார்.
"ஏமாற்றத்தில் இதயம் வலிக்கிறது.
ஏன் மாமா பாதியில நிறுத்திட்டீங்க..
மண்வாசனை மிக்க உங்களின் பேச்சுக்கு எத்தனையோ கோடி ரசிகர்கள்..
அதில் நானும் ஒருவன்.
"பரியேறும் பெருமாள்" படம்மூலம்தான் நான் உங்களை முதலில் பார்த்தது.
எதிர்நீச்சல் சீரியல் நம்மை
மாமா- மாப்பிள்ளையாய் இணைத்தது.
நடிப்பு ராட்சசரே!
நரம்பு முறுக்கேற கர்ஜிப்பவரே!
உன் தொண்டைச் செறுமல்..
ஒரு புலியின் உறுமல்.
பக்கம் பக்கமான வசனத்தையும்
படித்த வேகத்தில் நடித்து முடித்து
நடையைக் கட்டுபவரே
இன்று உங்களைப் பார்க்க வந்த படையை பார்த்தீரா?
வீட்டைவிட்டு, காட்டைவிட்டு
அப்பன்- ஆத்தாளைவிட்டு
தேனியில் இருந்து சென்னைக்கு
சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் வந்தீர்.
பரியேறும் பெருமாள் - எதிர்நீச்சல்
மூலம் உலகத் தமிழர்கள் இதயத்தில் தேனை'விட இனிப்பான கூட்டை கட்டியவர் நீர்.
உதவி இயக்குனர் மாரிமுத்துவாய்
நீங்கள் பட்ட கஷ்டம்,
நடிகர் ஆதிகுணசேகரனாய் நீங்கள் பெற்ற பட்டம்,
சாலிகிராமத்தில் இன்று
கூடிய கூட்டம்.
சினிமாவை நேசிக்கும், ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய ஓட்டம்.
மக்களுக்கு மனங்கவர்ந்த வில்லனாக,
மனைவிக்கு அன்புள்ள கணவனாக,
மகன்-மகளுக்கு அக்கறையுள்ள தந்தையாக,
எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் ஏற்றிவிட்டு..
நீங்கள் மட்டும் ஏன் கண்ணீர்கடலில் சென்றுவிட்டீர்!
நீங்கள் அமர்ந்திருந்தது ஆதிகுணசேகரன் வீட்டு நாற்காலியில் மட்டுமல்ல.
தொலைக்காட்சிபெட்டி உள்ள அனைத்து வீட்டாரின் இதய சிம்மாசனத்திலும்தான்.
குறுகிய காலத்தில் நிறைய கற்றுக்கொடுத்தீர்.
என் சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கமளித்தீர்.
வேட்டைக்கு பாயும் வேங்கையாய் நடித்தீர்.
எல்லாம் வேகமாய் செல்லத்தானா..
கரிகாலா என்று கம்பீரமாய் அழைக்கும் சிம்மக் குரலை இனி எப்போது கேட்பேன்..
நான் கண்ட இரும்பு மனிதர்,
இனி எங்களுடன் இல்லை.
ஆலமரம் நீ!
உனது விதைகள் நாங்கள்.
என் மூளை சிந்தனையற்று வெறிச்சோடி கிடக்கிறது.
ஏமாற்றத்தில் இதயம் வலிக்கிறது.
ஏன் மாமா பாதியில நிறுத்திட்டீங்க" என மீளாத் துயரத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
Listen News!