• Nov 19 2024

இதயம் நொறுங்கும் துயர சம்பவம்- நடிகர் மனோபாலாவின் பழைய புகைப்படங்களை பதிவிட்டு இரங்கல் தெரிவித்த ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக, அவர் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என ரசிகர்களாலும் திரையுலக பிரபலங்களாலும் நன்கு அறியப்பட்டவர் மனோபாலா


முன்னணி பிரபலமாக இருந்தாலும், ரசிகர்கள் முன்பு எந்தவித பந்தாவும் இல்லாமல், மிகவும் தன்மையாகவும், அன்பாகவும் பழகக்கூடிய மனோ பாலா, தன்னுடைய 69 வயதிலும் 16 வயது பையன் போல் ஸ்டைலிஷாகவும் எனெர்ஜிட்டிக்காகவும் இருக்க கூடியவர். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.


இதைத்தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் உடல் நலம் தேறிய மனோபாலா மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில்  கடந்த 15 நாட்களாகவே மனோ பாலா உடல்நிலை பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


அவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கான சிகிச்சையை  மேற்கொண்டனர்.  நோயின் தாக்கம் அதிகரித்ததால் வீட்டில் இருந்தே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நலயில்  இன்று காலை சிகிச்சை பலனின்றி மனோபாலா உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதனால் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு பல நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகை ராதிகா மனோபாலா தன்னுடன் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டு இரங்கல் தெரிவிததுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement