• Nov 17 2024

ஹலோ அறிவுஜீவி சார், இங்கே யாரு இடியட் - விஸ்வரூபம் எடுக்கும் பார்த்திபன் ,ப்ளூ சட்டை மாறன் விவகாரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பார்த்திபனின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகிய திரைப்படம் தான் இரவின் நிழல். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தாலும் ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

இதனால் இவருக்கும் பார்த்திபனுக்கும் இடையில் சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டு வருகின்றது.மேலும், ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கழுவி ஊற்றும் வீடியோக்களையும், செருப்பு மாலை அணிவித்தது ரசிகர்கள் தன் மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடு என்றும் பார்த்திபன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச பிரபலம் வாய்ந்த வெரைட்டி எனும் சினிமா வெப்சைட்டில் ஃபிஷ் அண்ட் கேட் திரைப்படம் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக ப்ரூஃப் கொடுத்து இரவின் நிழல் படத்தின் இயக்குநர் பார்த்திபன் மக்களை ஏமாற்றுகிறார் என தொடர்ச்சியாக அவருக்கு எதிரான ட்வீட்களை போட்டுத் தாக்கி வருகிறார்.

இரவின் நிழல் நடிகை பிரிகிடா சேரி மக்கள் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபனும், முன்னர் சேரி மக்கள் அப்படி பேசினார்கள், இப்போ படித்து முன்னேறியுள்ளனர் என பார்த்திபன் போட்ட ட்வீட்டும் சர்ச்சையை கிளப்பியது.

சேரின்னு சொல்லாதீங்க பார்த்திபன் என ப்ளூ சட்டை மாறன் அந்த பிரச்சனையையும் கையில் எடுத்து விளாசி இருந்தார்.இரவின் நிழல் திரைப்படம் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம். ஃபிஷ் அண்ட் கேட் வாய்ஸ் ஓவரில் மட்டுமே நான் லீனியர் படமாக அது நான் லீனியர் என ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட்டை ஷேர் செய்த பார்த்திபன், மீண்டும் மீண்டும் இதே போன்ற இடியாட்டிக் ஆர்க்யூமென்ட்ஸைத் தான் ப்ளூ சட்டை மாறன் முன் வைத்து வருகிறார் என திட்டி இருந்தார்.

மறுபடியும் நீங்க ப்ரூஃப் காட்டாமல் யாரோ போடும் ட்வீட்டை ஷேர் செய்து திட்டுறீங்க, நான் வெரைட்டி இதழின் ப்ரூஃப் போட்டுருக்கேன் என சொல்லி உள்ள ப்ளூ சட்டை மாறன், ஹலோ அறிவுஜீவி சார், இங்கே யாரு இடியட் என்கிற கேள்வியை முன் வைத்து தன்னை திட்டிய பார்த்திபனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே செல்லும் நிலையில், பார்த்திபன் இதை அப்படியே விட்டு விடுங்க என ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement