• Nov 17 2024

''எனக்கு இப்போவாச்சும் உதவி செய்ங்க'' – வறுமையில் வாடும்'' பருத்திவீரன் பட நடிகர் கோரிக்கை.

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பருத்திவீரன் படத்தில் டீக்கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்த ஒத்தக்கடை ஆறுமுகம் மருத்துவ செலவுக்கு கூட வழியில்லாமல் தமிழக அரசிடம் உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்திக் அவர்கள் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அந்த வகையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்தாலும் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளவர் தான் டீ கடை ஓனர் ஆறுமுகம். இந்த படத்தில் இவர் நடித்த டீக்கடையே இவருடைய சொந்தமான கடை தான். இந்த படத்தை எடுக்கும்போது நிறைய வண்டிகள் இவருடைய கடைக்கு முன்பு வந்தது.

சினிமா சூட்டிங் என்று கூறினார்கள். அப்போது ஆறுமுகம் அவருடைய கடையை பார்த்து தான் இந்த படத்தில் நடிக்க வைத்தார்கள். பின் இதனை அடுத்து இவர் தாமிரபரணி, சீமராஜா, ரஜினிமுருகன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பின்பு இவர் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து இருந்தார். இதனால் வருமானத்திற்காக ஆறுமுகம் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இவருடைய வீடு பிளக்ஸ் பேனர்கள் கொண்டு செய்யப்பட்டதாக இருக்கிறது.

இவருடைய மனைவி 100 நாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் தான் இவர்கள் குடும்பத்தை நடத்தி வருக்கிறார்கள். இது குறித்து கூட அவர் ஏற்கனவே பிரபல சேனலுக்கு பேட்டியும் கொடுத்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து இவரை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ஆறுமுகம் பேட்டியும் அளித்திருந்தார். அதில் அவர், எனக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது.

ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், என்னிடம் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு பணமும் இல்லை, வசதியும் கிடையாது. இதனால் நான் வீட்டுக்கு கண்ணீருடன் திரும்பி விட்டேன். தமிழக அரசு தான் எனக்கு மருத்துவத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் இவரை போல நிறைய துணை நடிகர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு உதவியை நாடி இருக்கிறார்கள்.


Advertisement

Advertisement