விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியலில் தற்பொழுது பாரதி தன்னுடைய மனைவி கண்ணம்மா என்று ஹேமா மற்றும் லக்ஷ்மி தன்னோட பிள்ளைகள் என்றும் ஏற்றுக் கொண்டு விட்டார்.
இந்நிலையில்“குழந்தைகளுக்கு உண்மை தெரிந்துவிட்டது, பாரதியும் கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டுவிட்டார். பிறகு என்ன? அவர் தன் மனைவி கண்ணம்மா மற்றும் குழந்தைகளுடன் வாழத் தொடங்குவார் என்பதால் சீரியல் முடிந்து விடப் போகுது என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஆனால் அடுத்ததாக “என்னை நம்பவில்லை. ஒரு டிஎன்ஏ ரிப்போர்ட் பேப்பரைதான் நம்புகிறீர்கள்? அப்படியானால் என் மீது நம்பிக்கை இல்லையா? என கண்ணம்மா பாரதி மீது கோபித்துக்கொண்டு சென்றுவிடுவார், இன்னும் கொஞ்ச காலம் கண்ணம்மா பின்னால் பாரதி சுற்றுவார், அதிலும் வெண்பா எதாவது தலையிட்டு சூழ்ச்சி செய்வார்” என சில ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
ஆனால் பாரதியை கண்ணம்மா ஏற்றுக் கொள்வாரா அல்லது ஏற்றுக் கொள்ளமாட்டாரா? என்ற விபரம் நாளை வெளியாகும் எப்பிஷோட்டில் தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!