தமிழ் திரையுலகின் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993-ஆம் ஆண்டு வெளியான 'ஆ ஒக்கடு அடக்கு' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகவே திரையுலகில் கால் பதித்திருந்தார்.
எனினும் தமிழில் இவரது முதல் படம் 'உழவன்' ஆகும். இப்படம் இவருக்கு பெரியளவில் வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை ஆயினும் இவர் நடித்த இரண்டாவது படம் ஆகிய 'உள்ளத்தை அள்ளித்தா' இவருக்கு வெற்றியையும் புகழையும் அள்ளிக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக முன்னேறியிருந்தார். இவ்வாறாக படங்களில் பிஸியாக வலம் வந்த இவர் 2010-ஆம் ஆண்டில் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை மணந்து கொண்டு கனடாவின் ரொறன்ரோவில் செட்டில் ஆனார்.
இவரின் கணவனான இந்திரன் பத்மநாதன் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர்களின் சிறந்த நல்வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் தனது நேரத்தை செலவிட்டு வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர்.
இந்தநிலையில் இவர் தற்போது தனது மூத்த மகளின் புகைப்படத்தினைப் பகிர்ந்து இருக்கின்றார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரது மகளும் அச்சு அசல் ரம்பாவை போலவே இருப்பதாகக் கூறி தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- ‘சிங்கம் 3’ படத்தில் இணையும் முக்கிய நடிகர்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!
- விமர்சனம் செய்தவர்களுக்கு விஜய் கொடுத்த மற்றுமோர் பதிலடி…வைரலாகும் புகைப்படங்கள்..!
- அதில் எவ்வித உண்மையும் இல்லை…என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள்…ரசிகர்களிடம் கெஞ்சிய பிரபல நடிகர்..!
- மாடு வாங்கியிருக்காரா மா.க.பா.ஆனந்த்..?என்னப்பா ஆளாளுக்கு மாடு வாங்கிறீங்க..! விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..!
- வெள்ளை உடையில் நீரில் மிதந்து வரும் அனிகா..கூடவே ரம்புட்டானுமா…கலாய்க்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!