பிரீத்தா விஜயகுமார் தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இவர் 1998-ஆம் ஆண்டு 'சந்திப்போமா' என்ற திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து 'படையப்பா' என்ற திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானவர்.
இவை தவிர 'ருக்மினி, பொண்ணு வீட்டுக்காரன், துபாய், புன்னகை தேசம்' உட்பட பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த பிரீத்தா இயக்குநர் ஹரி என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்ததும் சினிமாவிற்கு முழுக்குப் போட்டு விட்டார்.
இதனைத் தொடர்ந்து சந்தோசமாக தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்ற இத்தம்பதிக்கு தற்போது திருமணமாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், நேற்றைய தினம் இதனை கோலாகாமாக கொண்டாடி இருக்கின்றனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Listen News!