• Sep 20 2024

ரசிகர்களை சுண்டி இழுக்கும் சுருதி ஹாசன்... மொடன் லுக்கில் மயக்கும் புகைப்படங்கள் இதோ...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் மூத்த மகளான இவர் பாடகி, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஒருவராக விளங்கி வருகின்றார். 


திரையுலக பயணத்தின் தொடக்கமாக இவர் 2000-ஆம் ஆண்டில் வெளியான 'ஹே ராம்' என்ற படத்தில் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.அதனைத் தொடர்ந்து சோகன் சா இயக்கத்தில் உருவான 'லக்' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். சூர்யாவுடன் இணைந்து 'ஏழாம் அறிவு' என்ற படத்தில் நடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருவதோடு டாப் நாயகியாகவும் முன்னேறியிருக்கின்றார்.


இவ்வாறாக சினிமாவில் பிஸியாக இருந்து வரும் ஸ்ருதி தற்போது புகைப்பட கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார்கள். 


அதுமட்டுமன்றி அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றியும் வருகிறார்கள். இதனால் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சினிமா வட்டாரங்களால் கூறப்பட்டு வருகிறது.


இந்நிலையில் படத்தில் நடித்துக்கொண்டு பிசியாக இருந்தாலும் போட்டோஷூட் எடுத்து தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை மயக்கி வருகிறார். கருப்பு நிற ஆடையில் அட்டகாசமான தனது புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்... 



Advertisement

Advertisement