தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல்வேறு பாடல்களும் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதில் ஒரு சில பாடல்கள் மட்டும் எம் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றன. அதிலும் குறிப்பாக "என்ஜோய் எஞ்சாமி" பாடல் இன்றும் பல இடங்களில் ஒலித்த வண்ணம் தான் இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தற்போது "ஐயோசாமி நீ எனக்கு வேணாம்" என்ற பாடல் வைரலாகி வருகின்றது. அதாவது "ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதூம்" என்று வருகின்ற இந்தப் பாடலானது கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக இன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.
அந்தவகையில் விஜய் ஆண்டனியின் "நான்" என்ற திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்தான் இந்தப்பாடலையும் எழுதியுள்ளார்.
மேலும் இவர் ஏற்கனவே 'விஸ்வாசம், அண்ணாத்த' ஆகிய படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் பெரியளவில் வைரலாகின. அத்தோடு ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.
இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க பாடலைப்பாடியுள்ளார்.
மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட "மனிகே மகே ஹித்தே" பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதோ அந்தப் பாடல்..!
Listen News!