• Sep 20 2024

எதிர்நீச்சல் சீரியல் மறைந்த ஆதி குணசேகரனுக்கு வைக்கபட்ட சிலை... நெகிழ்ச்சியான சம்பவம்... புகைப்படம் இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகர் மாரிமுத்து நினைவாக ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் பெரியதாக சாதிக்க வேண்டும் என தேனி மாவட்டத்தில் இருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வந்த மாரிமுத்து. ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராக சில படங்கள் எடுத்தார், ஆனால் பெரிய அளவில் பேசப்படவில்லை. பின் நடிப்பில் இறங்கிய அவருக்கு அடித்த ஜாக்பாட் தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல்.


எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற பெயரில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். இந்த தொடர் கொடுத்த ரீச்  காரணமாக ஜெயிலர், இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். இந்த வெற்றியை கொண்டாடி வந்த மாரிமுத்து கடந்த மாதம் 8ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


இவரின் இழப்பு சினிமாத்திரையுலகினருக்கு பெரும் சோகத்தை தந்தது. இந்நிலையில், விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை ஒன்றை வைத்துள்ளனர். மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். இந்த செய்த்தித்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அது தொடர்பான புகைப்படம் இதோ..


Advertisement

Advertisement