தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இதுவரை சுமார் 65 படங்களில் நடித்து முடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 66 ஆவது படமாக வாரிசு படம் உருவாகி வருகின்றது. இப்படமானது வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், தற்போதே அப்படம் குறித்த அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த வண்ணம் இருக்கின்றன.
அந்தவகையில் சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' பாடல் வெளிவந்திருந்தது. தமன் இசையமைத்த இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி ஆகியோர் இணைந்து சூப்பராகப் பாடியுள்ளார்கள்.
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தெலுங்கு மொழியில் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதனை சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் கிண்டல் அடித்தும் வருகிறார்கள்.
அதாவது அதில் விஜய், ராஷ்மிகா துணி துவைப்பது போன்று எடிட் செய்து கேலி செய்திருக்கின்றார்கள். அந்த வீடியோ தற்போது வைரலாகி டிரெண்ட்டாகி வருகிறது.
#Ranjithame #Vaarasudu pic.twitter.com/7sTzmoAeN7
Listen News!