நடிகர் அருள்நதியின் நடிப்பில் பக்கா மாஸ் ஆக்சன் திரைப்படமாக தற்போது தயாராகி இருக்கும் படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. அந்தவகையில் வழக்கமாக தனது பாணியில் வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த அருள்நிதி நடிப்பில் கிராமத்து பின்னணியில் நடக்கும் கதைக்களமாக இப்படம் தயாராகி இருக்கின்றது.
இந்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட மிரட்டலான கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் அருள்நிதி நடித்துள்ளார். மேலும் கடந்த 2022-ஆம் ஆண்டு கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் வெளிவந்த நடிகர் அருள்நிதியின் அதிரடியான மாஸ் லுக்கின் புகைப்படங்கள் வெளியானதிலிருந்தே ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இப்படம் வருகிற மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனை முன்னிட்டு தற்போது அதன் அதிரடியான அந்த ட்ரெய்லர் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Listen News!