ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த படம் தான் அவதார். எபிக் சையின்ஸ் ஃபிக்சன் படமான இதை ஜேம்ஸ் கேமரூனே எழுதி, இயக்கி, தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருந்தார். மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியட்டர்களில் 3டி வெர்சனில் வெளியிடப்பட்டது.
237 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் அவதார். ரீலீசிற்காக 9 மில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் அதுவே பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது.
மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 2.847 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருந்தது.இந்த படம் 2010 ம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் அதிகபட்சம் 9 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ப்ரொடக்சன் டிசைன் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை பெற்றது.
அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். மேலும் இந்த படத்தை 20th Century Studios தயாரித்துள்ளது. 2014 ம் ஆண்டே அவதார் 2 படத்தை எடுக்க திட்டமிட்டார் ஜேம்ஸ் கேரூன். ஆனால் 2017 ல் தான் இந்த படத்தை துவக்கினார். எனினும் அவதார் 2 படத்துடன் சேர்ந்து அவதார் 3 படத்தையும் இயக்கி உள்ளார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.
இவ்வாறுஇருக்கையில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் அவதார். மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ.........
On December 16, return to Pandora.
Watch the brand-new trailer and experience #AvatarTheWayOfWater in 3D. pic.twitter.com/UtxAbycCIc
Listen News!