பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது 4ஆவது வாரத்தை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும் தான்.
ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கி உள்ளார்கள். அமைதியாக இருந்தவர்கள் கூட ஆண்பாம்பு போன்று சீறிப் பாயத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக குயின்ஷி, ஷெரினா, ஜனனி ஆகியோரைக் கூற முடியும். அத்தோடு எப்போதுமே எதையாவது தூக்கி வைத்து சண்டை போடுவதை தனலட்சுமி வழக்கமாக கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆண்டவர் கூறுகையில் "கெஞ்சினால் மிஞ்சினது மிஞ்சினால் கெஞ்சிறது என்று நாம கேள்விப் பட்டிருக்கின்றோம், அது நிறையவே இந்த வீட்டுக்குள்ள நடக்கிற மாதிரி இருக்கு, விளிம்பில் நிக்கிற ஆளை லைட்டாக சுரண்டி விட்டால் கீழே விழுந்து விடுவார்கள் என நினைக்கின்றார்கள், ஆனால் அதுக்கு முன்னாடி யார் விழுந்து எழுகிறார்கள் என்பதை புரிஞ்சுக்கிட்டு பண்ணனும், இல்லேன்னால் தள்ளுற ஆளே விழுற நிலைமைக்கு வந்து விடும்" எனக் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது யார் விழுறாங்க என்பதை பார்க்கலாம் எனவும் சூசகமாக கூறியிருக்கின்றார் நம்ம ஆண்டவர். இதனைக் கேட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் விழி ததும்ப முழிக்கின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கு என்று.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ...!
Listen News!