• Nov 17 2024

CID வேலை பார்க்கும் நடிகர் விஜய்... வெளியானது வெங்கட் பிரபுவின் ரகசியம்... தளபதி 68 திரைப்படத்தின் கதை இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சொந்தமாக கதை எழுதுவது என்பது குறைந்து விட்டதா என்ற சந்தேகத்தை விஜய் தேர்ந்தெடுக்கும் படங்கள் ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே லியோ படம் ஆங்கில படம் ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் கதையின் தழுவல் தான்.


இதற்கிடையில் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் பணியாற்றி வருகிறார். மங்காத்தா, மாநாடு என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் வெங்கட் பிரபு விஜய்க்கு பெரிய ஹிட் படம் ஒன்றை கொடுக்கப் போகிறார் என எல்லோருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெங்கட் பிரபு கதை தேர்விலேயே பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்.


ஏற்கனவே ஆங்கில படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட லியோ படம் விஜய்க்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் வெங்கட் பிரபுவும், தளபதி 68 படத்திற்காக ஆங்கில படத்தின் கதை ஒன்றை எடுத்து இருப்பது விஜய்யின் ரசிகர்களுக்கு இப்போது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அந்த ஆங்கில படத்தின் கதையை கேட்கும் பொழுது விஜய்க்கு இது கண்டிப்பாக செட் ஆகும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.


இயக்குனர் அங்கிலி இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான படம் தான் தி ஜெமினி மேன். இந்த படத்தின் கதையை உருவாக்குவதற்கே கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. 


குற்றப்புலனாய்வு ஏஜென்சியில் வேலை பார்க்கும் ஹென்றியை சுற்றி நடக்கும் கதைக்களம் இது. தான் வேலை செய்யும் ஏஜென்சியிலிருந்து தப்பிக்க முயலும் ஹென்றி தன்னை போலவே இளம் வயதுடைய மனிதனால் துரத்தப்படுகிறார். பின்னர் அவன் டிஎன்ஏவை ஆராய்ச்சி செய்யும்போது அந்த இளம் மனிதன் தன்னுடைய குளோனிங் என்பதை கண்டுபிடிக்கிறார். இதை தொடர்ந்து நடக்கும் பின் விளைவுகள் தான் முழு திரைக்கதை.


அதிக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்தது. இந்த கதையை தான் தற்போது தளபதி 68 படமாக தமிழில் எடுக்க இருக்கிறார்கள். ஜெமினி மேன் படத்தில் வில் ஸ்மித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். தளபதி 68 படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள் தான். ஒரு கதாபாத்திரத்திற்காக வில் ஸ்மித்திற்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement