• Sep 20 2024

வெளியானது கார்த்தியின் ஜப்பான் படத்தின் டீசர் இதோ! ஆரம்பமே அமர்க்களம் தான் போல!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி. இவர் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது ஜப்பான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அனு இமானுவேல் நடித்து வருகிறார்.


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

https://youtu.be/95cjJ8bxywk?si=yZnxBsV-xfcgFxyb

Advertisement

Advertisement