• Sep 21 2024

பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ள 'குக் வித் கோமாளி'.. புதிதாகக் களமிறங்கும் பிரபலங்களின் லிஸ்ட் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நிகழ்ச்சிகள் பலவற்றை மக்களுக்கு தந்த ஒரு சேனலாக விளங்குவது விஜய் டிவி. அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சி. மன அழுத்தத்தில் இருக்கும் சிலருக்கு, அவர்கள் தங்களின் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிப்பதற்காக மருத்துவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்க பரிந்துரைப்பதாக சில தகவல்களும் கடந்த சீசனில் போது பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியானது 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், விரைவில் நான்காவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனிலும் கடந்த மூன்று சீசன்களிலும் நடுவர்களாக இருந்த செஃப் தாமு ,மற்றும் வெங்கடேஷ் பட்  ஆகியோர் தான் நடுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோன்று இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்சன் தான் தொகுத்து வழங்க இருக்கின்றார். எனினும் கடந்த மூன்று சீசன்களில் கோமாளிகளாக இருந்து வந்த சிவாங்கி, பாலா, புகழ் ஆகியோர்  தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருவதால், அவர்கள் இந்த சீசனில் கலந்து கொள்வார்களா?  என்பது குறித்த தகவல் உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.


இந்த நிலையில் இந்த முறை புதிய கோமாளிகளாக ஜிபி முத்து, மணிமேகலை, சுனிதா, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, ரவீனா தாகா, ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


அதேபோல் குக்குகளாக தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகை வாசுகி, பிக்பாஸ் தாமரைச்செல்வி, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி அகத்தியன், ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமல்லாது வளர்ந்து வரும் சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஜனவரி 28ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement