• Sep 20 2024

தனது மகள்களுடன் இணைந்து... பெண் வேடத்தில் உள்ள கமல்ஹாசன்... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்றுவரை முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். உலக நாயகன் என ரசிகர்களால் சிறப்பாக அழைக்கப்பட்டு வருகின்ற இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். 


அந்தவகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் 'விக்ரம்'. இது மிகப்பெரியளவிலான வசூல் சாதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது கமலின் 233 ஆவது படமாக இது அமையும் என்றும் கூறப்படுகின்றது. 

மேலும் ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்காத வேளையில் கமலின் 234 ஆவது படத்தின் அறிவிப்பு கடந்த இரு நாட்களுக்கு முன் வெளிவந்தது. அதாவது மணிரத்னம் இப்படத்தை இயக்க, ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெய்ண்ட் என மூன்று நிறுவனங்கள் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.


இவ்வாறாக நடிப்பில் தலை சிறந்த நாயகனாக விளங்கி வருகின்ற கமல் ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் இருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில், கமல் ஹாசனின் கிளாசிக் வெற்றிப் படமான அவ்வை ஷண்முகி படத்தின் வேடத்தில் தனது இரு மகள்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement