• Sep 20 2024

பிரியங்கா மோகனுடன் ஜோடியாகும் நடிகர் கவின்... சம்பவம் செய்யவுள்ள இயக்குனர் நெல்சன்... நியூ அப்டேட் இதோ...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

லிஃப்ட், டாடா படங்களின் வெற்றி நடிகர் கவினுக்கு ரசிகர்களிடையே வரவேற்பையும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளன. தற்போது கோலிவுட்டில் அதிகமான படங்களில் கமிட்டாகியுள்ள ஹீரோ என்ற பெருமையும் கவினுக்கு கிடைத்துள்ளது. அதனை அடுத்து தற்போது புதிய படமொன்றில் கமிட்டாகி இருக்கிறார்.


கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம், கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய ஹீரோவாக மாறியுள்ள கவின் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகர் கவின் நடிப்பில் லிஃப்ட், டாடா என அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் மாஸ் காட்டிய நிலையில் அவருக்கு கோலிவுட்டில் இந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பையும் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகின்றன.


அடுத்தடுத்து சிறப்பான கூட்டணியில் இணைந்து படங்களில் நடித்து வருகிறார் கவின். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள நிலையில் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு இந்தப் படங்கள் உள்ளாகியுள்ளன. கவினின் ஸ்டார் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ஆடியோ ரைட்ஸ் விற்பனை ஆகியுள்ளது. 


இந்தப் படத்தை தொடர்ந்து கவின் அடுத்தடுத்த முன்னணி கூட்டணிகளுடன் இணைந்து வருகிறார். கவினின் 6வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள நிலையில், அவரது உதவி இயக்குநர் சிவபாலம் படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் நடிக்கவுள்ள நிலையில் கவினுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் கவின், எஸ்ஜே சூர்யா காம்பினேஷன் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டுள்ளன. 

தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பர் பிரதீப்பிற்காக சமீபத்தில் குரல் கொடுத்திருந்தார். மேலும் இவர்கள் இருவரின் பேட்டிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. இந்நிலையில் டாடா படம் மூலம் தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள கவினுக்கு இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 

Advertisement

Advertisement