நடிகர் கமல்ஹாசன் திரைப்படங்களைத் தாண்டி தற்போது அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றார். சினிமா வாழ்க்கையில் இவர் செய்த சாதனைகளோ ஏராளம். அந்தவகையில் விக்ரம் படத்தின் வாயிலாக இவர் செய்த வசூல் சாதனையை இன்றும் நம்மால் மறக்க முடியாது.
மேலும் இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பெரிய வெற்றி பெற்றிருந்த இந்தியன் படத்தின் அடுத்த பாகமான "இந்தியன் 2" படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது கமல் ஹாசன் 22000 அடி உயரத்தில் விமானத்தின் பைலட் இருக்கையில் அமர்ந்திருந்த புகைப்படமானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் "பைலட்டாக மாறி விட்டீர்களா" எனக் கேட்டு கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
Listen News!