• Sep 20 2024

அனல் பறக்கப் போகுது... 'ஜெயிலர்' படத்தைப் பார்த்துவிட்டு முக்கிய பிரபலம் முன்வைத்த விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை தற்போது  இயக்கி முடித்துள்ளார் .


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


அந்தவகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இதனையடுத்து படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் ஜெயிலர் படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ள மிர்ணா படத்தைப் பார்த்து விட்டு தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது Sureshot என்று நெருப்பு எமோஜியுடன் Jailer என விமர்சனம் செய்துள்ளார். அவரது டுவிட் இப்போது ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது. இவரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.


Advertisement

Advertisement