பாலிவுட் திரையுலகில் பிரபலமான முன்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் சோனு நிகம். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளனர். மேலும் இவர் தமிழில் ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல்வேறு சூப்பர்ஹிட் பாடல்களை பாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக இவர் பாடிய பாடல்களில் ஜீன்ஸ் படத்தில் இடம்பெறும் 'வாராயோ தோழி', மதராசபட்டினம் படத்தில் வரும் 'ஆருயிரே', கிரீடம் படத்தில் இடம்பெறும் 'விழியில் உன் விழியில்' போன்ற பாடல்களை இன்றும் நம்மால் மறக்க முடியாது.
இவ்வாறு பல்வேறு மொழிகளிளும் பல பாடல்களைப் பாடி மக்கள் மனதை வென்ற சோனு நிகம், அடிக்கடி பல பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார். இதில் ஏராளமான சோனு நிகம் ரசிகர்கள் கலந்துகொண்டு அவரது சூப்பர்ஹிட் பாடல்களை கேட்டு மகிழ்ந்துள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் பதர்பேகர் என்பவரின் மகனும் கலந்துகொண்டுள்ளார். அவர் அவசர அவசரமாக வந்து சோனு நிகம் உடன் இணைந்து நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சோனு நிகமின் பாதுகாவலர்கள் அவரை உடனே தடுத்துள்ளனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் மகன் சோனு நிகம் மேடையில் இருந்து கீழே இறங்கும் போது அவரது பாதுகாவலரை கீழே தள்ளிவிட்டதோடு, சோனு நிகமையும் தள்ளிவிட முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக இதில் சோனு நிகம் எந்தவிதமான காயம் இன்றி தப்பித்தாலும், அவரது பாதுகாவலருக்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து செம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோனு நிகமின் பாதுகாவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
#Breaking
Singer Sonu Nigam who raised his voice about Azan Loudspeakers attacked by Janab Uddhav Thackeray MLA Prakash Phaterpekar and his goons in music event at Chembur. Sonu has been taken to the hospital nearby. pic.twitter.com/32eIPQtdyM
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் மகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Listen News!