தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குநராக இருந்து பின் ராஜா ராணி என்ற படம் மூலம் சினிமாவில் இளம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.காதல், குடும்பம், பாசம் என எல்லாம் கலந்து கலவையாக இவரது படங்கள் இடம்பெறும்.
இயக்குநர் அட்லி நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.மனைவி கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே,தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் உடன் மூன்று படங்களில் அட்லீ பணியாற்றியுள்ளார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படம் விரைவில் திரைக்கும் வர இருக்கிறது.இப்படி சினிமாவில் நுழைந்த சில வருடங்களிலேயே பாலிவுட் வரை ரீச் ஆகியுள்ள அட்லீயின் அப்பா மற்றும் அம்மாவை பார்த்துள்ளீர்களா, இவர்கள் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்த புகைப்படம் இதோ!
Listen News!