• Sep 20 2024

வெளியானது ஜவான் படத்தின் 'ராமையா வஸ்தாவையா' பாடல் ... ஷாருக்கானுடன் கவர்ச்சி டான்ஸ் ஆடும் நயன்தாரா.. வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


அத்தோடு தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. 

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்த பாடலான ‘ஹையோடா’ பாடல் வெளியாகி அதுவும் சிறந்த வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் இதன் மூன்றாவது பாடலான "நாட் ராமையா வஸ்தாவையா..." பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலில் ஷாருக்கானுடன் இணைந்து நயன் தாரா, சான்யா மல்ஹாத்ரா ஆகியோரும் நடனமாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement