• Sep 20 2024

'ஜவான்' படத்தில் தோன்றி சர்ப்பிரைஸ் கொடுத்த பிரபலம்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஷாருக்கான்.. வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நான்கு வருட கடுமையான உழைப்பில் உருவான படம் தான் ஜவான். அதாவது இடையில் நின்றுவிட்ட இப்படத்தை மீண்டும் தொடங்கி சிறப்பாக நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து இன்றைய தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது.


அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் வாயில்லா பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் அட்லீ. படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிறந்த விமர்சனங்களை முன்வைத்த வண்ணமே இருக்கின்றனர். 


இந்த நிலையில் ஜவான் படத்தில் இயக்குநர் அட்லீ ஒரு காட்சியில் வந்து ரசிகர்களுக்கு சூப்பரான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஏற்கெனவே விஜய்யை வைத்து இவர் இயக்கிய பிகில் படத்தில் ‘சிங்கப்பெண்ணே’ பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய்யுடன் இணைந்து தோன்றினார். 


இதனையடுத்து தற்போது ஜவான் படத்தில் உள்ள 'வந்த இடம்' என்னும் அறிமுக பாடலில் அட்லீ தோன்றி அசத்தலான டான்ஸ் ஒன்றினையும் ஆடியுள்ளார். இதுகுறித்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். 


Advertisement

Advertisement