• Nov 15 2024

பிறந்தநாளைக் கொண்டாடும் கணவன்... வாழ்த்து மழை பொழியும் ஸ்ரீதேவி விஜயகுமார்... வைரலாகும் பதிவு இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், குணச்சித்திர நாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். இவரின் இளைய மகள் தான் ஸ்ரீதேவி விஜயகுமார்.

இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தான் தமிழ் சினிமாவிற்கு 'காதல் வைரஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர்.


இப்படத்தினைத் தொடர்ந்து 'தித்திக்குதே, தேவதையை கண்டேன்' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருப்பினும், அப்படங்கள் யாவற்றிலும் தனது சிறப்பான நடிப்பினையே வெளிப்படுத்தி இருக்கின்றார்.


இவ்வாறாக படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி விஜயகுமார் கடந்த 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.


இந்நிலையில் ராகுல் இன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அதற்கு மனைவி ஸ்ரீதேவி தனது வாழ்த்துக்களினைத் தெரிவித்து இருக்கின்றார். இப்பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement