விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'குக் வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடிக்கும், சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் கடந்த வாரம் நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து மைம் கோபி, விசித்ரா, சிருஷ்டி டாங்கே, சிவாங்கி, ஆண்ட்ரியன் ஆகிய 5 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்கள் 5 பேருக்கு இடையே தான் இந்த வாரம் போட்டி இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நேரத்தில் திடீர் டுவிஸ்ட் ஆக 2 வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்கி நடுவர்கள் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோவும் வெளியாகி ஒருக்கின்றது.
அதன்படி முதலாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல கலை இயக்குநர் கிரண் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் ஒரு சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.
மேலும் மற்றொரு வைல்டு கார்டு போட்டியாளர் கஜேஷ் களமிறங்கியுள்ளார். இவர் புகழ்பெற்ற காமெடி ஜாம்பவான் நாகேஷின் பேரன் ஆவார்.
இந்நிலையில் இந்த வார எபிசோட் களைகட்டும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Listen News!