• Sep 20 2024

உடல் எடை அதிகரித்து... ஆள் அடையாளமே தெரியாதளவிற்கு மாறியுள்ள விஜய்யின் ரீல் தங்கை... வெளிவந்த வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன். அதனைத் தொடர்ந்து பின்னர் 'யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, வேலாயுதம்' உட்படப் பல படங்களிலும் நடித்துள்ளார். 


தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்திருக்கின்றார். அதிலும் குறிப்பாக வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் இவர் தனது ரீல் அண்ணன் ஆகிய விஜய்யுடன் இணைந்து செய்த அட்டகாசங்களுக்கு அளவேயில்லை. அதை இன்றும் நம்மால் மறக்க முடியாது. 


இந்நிலையில் இவர் தற்போது ஊஞ்சலாடும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "முன்னர் இருந்ததை விட இப்போது சற்று உடல் எடை அதிகரித்து விட்டீர்கள்" எனக்கூறி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement