• Nov 19 2024

நீயா நானா நிகழ்ச்சியை கண்டு வெளுத்து வாங்கிய விஜயலக்ஷ்மி-தரமான பதிவு இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் குடும்ப தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை கண்டு கடுப்பாகி இருக்கிறார் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான விஜயலக்ஷ்மி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சியி “நீயா நானா”. நீயா நானா கோபிநாத் என்று கூறினாலே போதும் எல்லோருக்கும் தெரிந்துவிடும். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். 

இவர் 2006 ஆம் ஆண்டு முதல்  “நீயா ஆண்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கெதிரான இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் வேலைக்கு அமர்த்திய குடும்ப தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருக்கிறது. மேலும் இதில் பணி பெண்கள் பலரும் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை மன வேதனையுடன் சொல்லி இருக்கிறார்கள். அதில் ஒரு பணிப்பெண், நாய்களுக்கு சோறு வைப்பது போல் தனிதட்டு, தனி டம்ளர் கொடுக்கிறார்கள்.



ஆனால், எங்களை நாயை விட கேவலமாக நடத்துகிறார்கள் என்று சொல்லி இருந்தார். உடனே குடும்ப தலைவியில் இருந்து ஒரு பெண், 10 ஆண்டுகள் முன் இது நடந்து இருந்திருக்கலாம், இப்போதில்லை என்று தெரிவித்தார். உடனே கோபிநாத் பணி பெண்களிடம், இங்கு யாருக்கெல்லாம் இந்த மாதிரி தனித்தட்டு, தனி டம்ளர் வேலை செய்யும் இடத்தில் இருக்கிறது? என்று கேட்டவுடன் பலரும் கையை தூக்கி இருந்தார்கள். அப்போது ஒரு பணிப்பெண்,கடைக்கு போக சொல்வார்கள்.இதன் பின் காசை கையில் கொடுக்காமல் தூக்கிப் போடுவார்கள். அருகிலுள்ள நாயை தொடுவார்கள்.



ஆனால், எங்களை தொட மாட்டார்கள். நாங்கள் வெட்டி கொடுத்த காய்கறியை தான் அவர்கள் செய்வார்கள். ஆனால், காப்பியை சூடு செய்து வைக்க கிச்சனுக்குள் விடமாட்டார்கள். நாங்கள் குடித்த டம்ளரை கிச்சனில் கழுவ வேண்டாம் என்று சொல்லி வீட்டிற்கு வெளியே இருக்கும் பைப்பில் போய் கழுவ சொல்லுவார்கள்.

அத்தோடு  மீந்த சாப்பாட்டை குழந்தைகளுக்கு எடுத்து செல்ல பிளாஸ்டிக் கவரில் போட்டு தருவார்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே சில பெண்களும் எங்களுக்கும் இந்த நிலைமைதான் என்று கூறியிருக்கிறார்கள்.இதன்  பின் கோபிநாத், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.இதெல்லாம் இன்னும் ? என்று பேசிக் கொண்டிருக்கும் போதே குடும்ப தலைவி ஒருவர், அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்று கேட்டார். பின் கோபிநாத் கோபமாக எதை ஒப்புக்கொண்டு, என்ன பேச்சு இதெல்லாம்? யாரெல்லாம் தனித் தட்டு கொடுத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டவுடன் ஒரு பெண் பாரம்பரியமாக பழகிவிட்டோம் சார் என்று சொல்ல அந்த காலத்தில் வேலைக்காரர்களுக்கு தனித்தட்டு இருந்ததை இப்போது பின்பற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.



மேலும்  இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பிக் பாஸ் விஜயலக்ஷ்மி கடுப்பாகி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். என்ன ஒரு ஆணவம் நீங்கள் அவர்களை வேலை செய்வதற்காகத்தான் தேர்ந்தெடுப்பீர்கள் எப்படி நீங்கள் ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்கிறீர்களோ அதே போலத்தான் அவர்கள் உங்களுக்காக வேலை செய்கிறார்கள் அதற்காக அவர்கள் உங்கள் அடிமை என்று அர்த்தம் கிடையாது. 


அவர்களின் வேலையில் ஏதாவது குறை இருந்தால் அதைக் கேட்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்காதீர்கள். உங்களைப் போலவே அவர்களுக்கும் கண்டிப்பாக விடுமுறை தேவை. அத்தோடு சமூகத்தில் போலி கிரீடத்தை வைத்துகொண்டு இருக்கும் மகாராணிகளுக்கு ஏற்ற தலைப்பு தான். எரிச்சலாக இருக்கிறது.







Advertisement

Advertisement