• Nov 10 2024

வருங்கால கணவருடன் விமான நிலையத்தில் ஹன்சிகா... வைரலாகும் புகைப்படம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. இவரின் நடிப்பிலும், அழகிலும் மயங்கி இவரிரு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சூர்யா, விஜய், சிம்பு, ஜெயம்ரவி எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார்.


இவ்வாறாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்த இவரிற்கு அடுத்த மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. அதாவது இவர் சோஹைல் கதூரியா என்பவரை வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளார்.


இவர்கள் இருவரினதும் திருமணம் ஆனது ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் நடைபெற உள்ளது. இவ்வாறாக திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க மறுபுறம் தனது கணவனுடன் இணைந்து போட்டோஷூட் என இறங்கியிருக்கின்றார் ஹன்சிகா.

இந்நிலையில் தற்போது ஹன்சிகா அவரின் வருங்கால கணவருடன் விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்தப்புகைப்படம்..!


Advertisement

Advertisement