• Sep 20 2024

மாடர்ன் ட்ரெஸ் அணிந்து... அழகில் அக்காவையே மிஞ்சிய ஷாம்லி... வைரல் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்ஷத்திரமாக இருந்தவர் தான் ஷாலினி. இவரின் உடன் பிறந்த சகோதரி தான் நடிகை ஷாம்லி. இவர் டைரக்டர் மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.


மேலும் இவர் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய, மாநில அரசு விருதுகளை பெற்றவர் பேபி ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்த அவர், குமரியான பின்பு தனது அக்காவின் கணவர் அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ மற்றும் ‘ஒய்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்று தன் படிப்பைத் தொடர்ந்தார்.


இதன் பின்னர் 2016 -ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி என்ற படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு படம், படிப்பு என ஷாம்லி பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.  

அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் "அழகில் அக்காவை மிஞ்சி விட்டீர்கள்" எனக் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement