• Sep 20 2024

கண்கலங்கி நிற்கும் கலா மாஸ்ட்டர்... கேப்டன் சமாதி முன் செய்த செயல்... வைரல் வீடியோ இதோ...

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகரும், தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். 


திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலர் தேமுதிக அலுவலகத்திலும், தீவுத்திடலிலும் வந்து விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.மேலும் அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில் கலா மாஸ்ட்டர், கேப்டன் விஜயகாந்த அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இன்று செய்து கண்ணீர் மல்க இருந்து அவரை வணங்கி வழிபட்டுள்ளார். அதுமட்டுமல்லாது தனது இன்ஸராக்கிராம் பதிவில்  " நான் மீண்டும் சென்னை வந்தவுடன் நேராக கேப்டனின் இறுதி ஊர்வலத்திற்கு சென்றேன். அத்தகைய நம்பமுடியாத மனிதனின் மரணத்தைப் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. நான் அவரது குடும்பத்தினரையும் பார்வையிட்டேன், அவர்களைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், மிஸ் யூ கேப்டனை வலுவாக இருக்க கடவுள் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பார் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


அந்த பதிவுடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைதளங்கள் பார்வையாளர்களினால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு...


Advertisement

Advertisement