தமிழ் சினிமாவில் 2012 இல் வெளிவந்த 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாபி சிம்ஹா. அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் இவர் படங்களில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகின்றார். இவர் நடிப்பில் தற்போது 'வசந்த முல்லை' என்ற படம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் நேற்று வெளியான இப்படமானது பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தினுடைய திரைக்கதை பற்றிப் பார்ப்போம்,
அதாவது இப்படத்தில் மென்பொருள் துறையில் வேலை செய்யும் ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. இதில் ஜ டி ஊழியர்கள் அதிகம் சம்பாதித்தாலும் அதன் எதிர்மறையின் பிம்பமாக கதை ஆரம்பிக்கின்றது. ருத்ரன் பணிச்சுமையால் தன்னுடைய மனைவிக்கு கூட நேரம் ஒதுக்காமல் கடுமையான மனஅழுத்தத்தில் இருக்கும் ருத்ரனை அவரது மனைவி மலைபகுதி ஒன்றிற்கு சுற்றுலாக்கு அழைத்து செல்கின்றார்.
இவ்வாறு அவர் தனது கணவனை அழைத்து செல்கையில் இருவரும் வழியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்குகின்றனர். அப்படி தங்கும்போதுதான் வில்லேந்திய ஒரு உருவம் ருத்ரனை கொலை செய்ய முயற்சி செய்கிறது. இதிலிருந்து பின்பு அவர் எப்படி தப்பித்தார். அந்த வில்லேந்திய உருவம் யார் என்பதுதான் இப்படத்தினுடைய மீதி கதை.
இன்னொரு விடயம் என்னவெனில் ஹாலிவுட் பட கதையில் வருவதை போல டைம் லூப்பில் மாட்டிக்கொண்டு திரும்ப திரும்ப ஒரே நிகழ்வுகள் பலவற்றை ருத்ரன் எதிர்கொள்கிறார். அப்படி அவர் எதிர்கொள்ளும் அந்த நிகழ்வுகள் யாவும் உண்மையில் கால வளையம் கிடையாது என்பதை இறுதி கட்சியின் மூலம் சொல்லியிருக்கிறார் படத்தினுடைய இயக்குநர்.
மேலும் இப்படத்தில் நடிகர்களின் தேர்வு, கலை, இயக்கம், ஒளிப்பதிவு, போன்றவைகள் அனைத்தையும் சரியாக தேர்ந் தெடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் இப்படி திரும்ப திரும்ப வரும் காட்சிகள் பலவும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறு சலிப்பை ஏற்படுத்துகின்றது.
இருப்பினும் பாபி சிம்ஹா நடிப்பு சரியாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் அவரின் நடிப்பு ஒத்துப்போகவில்லை. குறிப்பாக இவர் கோவப்பட்டு கத்தும் காட்சிகள் இவருக்கு சரியாக பொருந்தவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
அதே போலஇப்படத்தில் சில காட்சிகளில் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இயக்குநர் தவறிவிட்டார். மேலும் இப்படத்தில் ஆர்யா சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் படத்திற்கு தேவையான நடிப்பை அளவாக கொடுத்திருக்கிறார்.
இவரைப் போலவே ஊழியராக வரும் கொச்சு, மருத்துவராக வரும் பாபு போன்றவர்களும் நல்ல நடிப்பையே கொடுத்திருகின்றனர். மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்றவை அனைத்துமே சிறப்பாகவே இருக்கின்றது.
இவ்வாறான 'வசந்த முல்லை' படத்தின் குறை என்று சொல்லும் போது, லூப் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்கிறது, அத்தோடு வசனங்களிலும் சற்று கவனம் செலுத்த வேண்டி இறுகின்றமையை கூற முடியும்.
அதேபோல் இப்படத்தின் நிறைகள் என்று கூறும்போது பின்னனி இசை, ஒளிப்பதிவு போன்றவை பிரமாதமாக இருப்பதோடு, கதாபாத்திரங்கள் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர், திரைக்கதையமயும் ஓரளவு சிறப்பாக இருக்கின்றது, போன்றவற்றைக் கூறமுடியும்.
எனவே மொத்தத்தில் 'வசந்த முல்லை' படம் வெற்றியா தோல்வியா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!