மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடி முடிந்தது தான் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் தான் விக்ரமன்.இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வருபவர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய உறுப்பினராக அங்கம் வகிக்கும் இவருக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் ஆதரவு குரல்கள் எழும்பின. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னராக வந்த இவர் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் லண்டனில் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பயின்று வரும் கிருபா முனுசாமி எனும் பெண் வழக்கறிஞர் ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு கடிதம் மூலம் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து கடிதம் அனுப்பியிருந்தார்.
அதாவது ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார் எனவும் அதுமட்டுமல்லாது நான் விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து அவருடைய தங்கையையும், தாயையும் வன்புணர்வு செய்து விடுவேன்என விக்ரமன் கூறினார் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் தற்போது இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் விக்ரமன் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது கிருபா முனுசாமி திட்டமிட்டே தன் மீது அவதூறு வழக்குகளை பரப்புவதாகவும், சாதி முறையான அடக்குமுறைகளை கனவிலும் கூட நினைத்தது இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறியுள்ளார் வழக்கறிஞர் கிருபா. சமீபகாலமாக பொதுவெளியில் தலையே காட்டாதவரின் குற்றச்சாட்டு எந்தளவிற்கு உண்மை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிறுவயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டி வந்த விக்ரமன் மீது சாதி ரீதியான மற்றும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டு வந்துள்ளமை சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Listen News!