• Nov 17 2024

'குஷி' படம் எப்படி இருக்கிறது?... காதலில் அசத்தினார்களா..? சொதப்பினார்களா..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா, விஜய் தேர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் தான் குஷி. இப்படத்தினை இயக்குந் ஷஜவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.


இந்த படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்க அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில், விஜய் தேவர் கொண்டா நடித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரிலீசாகி உள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் குறிப்பிடுகையில் "அடுத்தடுத்து 3 தோல்விகளை பெற்றிருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு பின் குஷி மூலம் மிகப்பெரிய ஹிட்டினை விஜய் தேவரகொண்டா கொடுத்திருப்பதாகவும், ஷிவா நிர்வாணா மற்றும் சமந்தாவுக்கும் இது ஒரு சிறந்த கம்பேக் படமமாக அமைந்துள்ளதாகவும், இப்படம் கண்டிப்பாக 50 கோடி ஷேரினைப் பெற்றுக் கொள்ளும்" எனவும் தெரிவித்துள்ளார்.


அதேபோன்று மற்றோரு நெட்டிசன் தனது பதிவில் "குஷி ஒரு சிறந்த குடும்பத் திரைப்படமே எனவும், படம் முழுவதும் சிரிக்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைந்திருப்பதாகவும், நீண்ட இடைவெளியின் பின்னர் பின்னர் ஒரு திருப்திகரமான படமாக குஷி அமைந்துள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஒருவர் கூறுகையில் "குஷி படத்தைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் படம் பிளாக்பஸ்டர். விஜய் தேவரகொண்டாவுக்கும், சமந்தாவுக்கு சிறந்த கம்பேக் படமாக உள்ளது" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.


அதேபோன்று இன்னொருவர் தனது பதிவில் "குஷி படத்தின் முதல் பாதி நன்றாகவும், இரண்டாம் பாதி சூப்பராகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார், மேலும் இப்படத்தில் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் நன்றாக உள்ளது" எனவும் பாராட்டி இருக்கின்றார்.


மற்றோர் நபரின் பதிவில் "சமந்தா, விஜய் தேவரகொண்டா ஜோடிப் பொருத்தம் சூப்பராக உள்ளது, இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஏனையோரின் நடிப்பும் பாராட்டதக்கது. பாடல்களும் செமையாக இருக்கின்றன, மேலும் பழைய கதை, கிரிஞ் காட்சிகள், எமோஷன் காட்சிகள் சுமாராக உள்ளது. அதேபோல் இரண்டாம் பாதியில் பலமான மோதல் எதுவும் இல்லை. கிளைமாக்ஸ் நன்றாக உள்ளது. நீளமான படம், ஆங்காங்கே காமெடியாக உள்ளது. மொத்தத்தில் ஆவரேஜ்" எனக் குறிப்பிட்டு கலவையான விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.


மேலும் ஒருவர் "குஷி ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இருப்பதாகவும், ஆனால் சில இடங்களில் படம் நீளமாக இருப்பதை போல தெரிவதாகவும், கிளைமாக்ஸில் எமோஷனல் காட்சிகள் நன்றாக இருக்கின்றது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement