• Nov 14 2024

'ரெஜினா' படம் எப்படி... ஆக்ஷனில் சுனைனா கலக்கினாரா..? கவிழ்த்தாரா..? திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சுனைனா மையக்கதாபாத்திரத்தில் நடித்துத் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ரெஜினா. டொமின் டி சில்வா இயக்கியுள்ள இப்படத்திற்கு சதீஷ் இசையமைத்துள்ளார். அத்தோடு இப்படத்தில் ரித்து மந்திரா, ஆனந்த் நாக், பவா செல்லத்துரை, சாய் தீனா, நிவாஸ் அதிதன், விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.

கதைக்கரு 

அந்தவகையில் இப்படத்தினுடைய கதைக்களம் குறித்து முதலில் பார்ப்போம். அதாவது தன் காதல் கணவனை இழக்கும் ஆதரவற்ற பெண்ணான ரெஜினாவுக்கு எவ்வளவோ நியாயம் கேட்டும் காவல் நிலையத்தினால் சிறந்த தீர்வு கிடைக்கவில்லை. 

இத்தகைய சூழலில் ரெஜினா எடுக்கும் முடிவுகள் என்ன, அவற்றின் விளைவுகள் என்ன என்பதே இப்படத்தினுடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.

சுனைனாவின் ஆக்‌ஷன் நடிப்பு எப்படி 

ஆக்‌ஷன் அவதாரத்தில் சுனைனாவை போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லரில் பார்த்துவிட்டு படுஆர்வமாக படத்துக்குச் சென்ற ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

அத்தோடு எமோஷனல் காட்சிகளில் முயன்றவரை சுனைனா நன்றாக நடித்து நியாயம் சேர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாது புரட்சிப் பெண், ராக் ஸ்டார் கதாபாத்திரத்தில் போராடி சுனைனா சிறப்பாக நடித்திருக்கின்றார்.


பலவீனம் 

மலையாள இயக்குநர் டொமின் டி செல்வாவின் முதல் தமிழ் திரைப்படம் இதுவாக உளது. மேலும் இது பெண் மைய படம் என்று கூறியிருந்தாலும் ஆண்மையவாத பார்வையிலேயே படம் செல்கிறது. 

அதேபோன்று சதீஷின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை, திக்குத் தெரியாத திரைக்கதையுடன் சேர்ந்து பின்னணி இசையும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தூக்கத்தையே வரவழைக்கிறது.

மேலும் கணவனின் இறப்பிற்கு எதிராக நியாயம் கேட்டு ரெஜினாவின் அழுகுரலோடு தொடங்கும் படம், இலக்கின்றி திசை திரும்பி வேறு எங்கெங்கோ பயணிக்கிறது. அதாவது இடைவெளி வரையிலுமே என்ன சொல்ல வருகிறார்கள், எங்கே படம் பயணிக்கிறது எனப் புரியாமல் படம் ரசிகர்களை சோர்வடைய வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாது ரெஜினாவுக்கு தோள்கொடுக்கும் தோழர்கள், திருநங்கை என அனைத்தும் உச்சக்கட்ட செயற்கையாக அமைந்துள்ளது. 

இதற்கு மேல் சிங்கம், புலி என பஞ்ச் டயலாக் பேசவிட்டு சுனைனா ரசிகர்களையே காண்டாக்குகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொகுப்பு 

ஆகவே தொகுத்துப் பார்த்தால் மொத்தத்தில்  'ரெஜினா' படம் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisement

Advertisement