இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இருப்பினும் இந்த படம் பல தடைகளைத் தாண்டித் தான் வெளிவந்திருக்கின்றது.
அதாவது கேரளாவில் 32,000க்கும் அதிகமான இளம் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி அவர்களை தீவிரவாதிகளாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியும் துன்புறுத்துவதாக இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக இந்தப் படத்திற்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், தடை விதிக்கப்படவில்லை.
மேலும் குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகி உள்ள இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அது குறித்துப் பார்ப்போம்.
அந்தவகையில் ஒருவர் கூறுகையில் "தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சிறப்பாக உள்ளது. ஷாலினியாகவும் மதம் மாறிய பின்னர் பாத்திமாகவும் நடிகை அதா சர்மா தனது சிறப்பான நடிப்பால் அசத்தி உள்ளார். இந்த படத்துக்கு 3 ரேட்டிங்" என தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மேலும் ஒரு நபர் "இந்தியா மட்டுமின்றி உலகமே கேரளாவில் நடக்கும் இந்த பயங்கரவாதம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மத மாற்றம் செய்து பெண்களை காதல் என்கிற பெயரில் மோசம் செய்வது நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த படம் என்னை ரொம்பவே பாதித்துள்ளது. கேரள பெண்களுக்கு இப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதா? ரொம்பவே ஷாக்காக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று இன்னோர் நபர் "தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை திணிப்பதும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக வாழக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பணத்துக்காக இந்த ஜோக்கர் நடிகை என்ன வேணா செய்வார் என நடிகை அதா சர்மாவையும் தி கேரளா ஸ்டோரியையும்" ரொம்ப மோசமாக கழுவி ஊற்றி உள்ளார்.
இன்னொரு நபர் "நம்ம எந்த மதமா வேணா இருக்கலாம் எந்த மதத்துல இருக்க தப்பையும் அந்த மதபோதகர்கள் செய்யும் தவற கூட படத்துல சொல்லலாம் அனால் உண்மை கதை என்று சொல்லி உண்மைக்கு புறம்பான படமாக இருக்கும் #TheKeralaStory படம் ஒரு மதத்தின் மீது வெறுப்பை மட்டுமே திணிக்கிறது" இந்த படம் என இந்த ரசிகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவ்வாறாக இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
Listen News!