• Sep 19 2024

'ஸ்வீட் காரம் காபி' வெப் சீரிஸ் எப்படி இருக்கிறது..? திரை விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணத்தை அழகாக தொகுத்துக் காட்டுகின்ற ஒரு வெப் சீரிஸ் தான் 'ஸ்வீட் காரம் காபி'. அதாவது வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையின் மீதான தங்கள் அனஂபு, மேலும் தன்னம்பிக்கை மற்றும் சுய-கண்டுபிடிப்பின் இனிமையான மற்றும் நிறைவான விஷயங்கள் பலவற்றைக் கண்டறிகின்றதை மையமாக கொண்டமைந்துள்ளது.

அந்தவகையில் ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கம் மற்றும் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இந்தத் தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர். லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் உடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம்

முதலில் கதைக்கரு குறித்துப் பார்ப்போம். அந்தவகையில் ஒரு வீட்டில் வசித்து வரும் மாமியார் லட்சுமி, மருமகள் மது, மற்றும் பேத்தி சாந்தி ஆகியோர் குடும்பத்தில் சந்திக்கும் ஆணாதிக்க பிரச்சனைகளால் மனம் சோர்வடைந்து அதிலிருந்து மீண்டு வர மூவரும் சேர்ந்து ஒரு சாலை பயணம் செல்ல முடிவெடுக்கின்றனர். 

இதனைத் தொடர்ந்து பின்னர் என்ன நடந்தது இவர்கள் எதிர்பார்த்த நிம்மதி கிடைத்ததா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் உடைய மீதிக் கதையாக அமைந்துள்ளது.

படத்தைப் பற்றிய அலசல் 

இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

அத்தோடு பாட்டியாக வரும் லட்சுமி முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கின்றார்.

அதேபோல் மதுபாலாவும் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.


பலம் 

இந்த வெப் சீரிஸ் தொடரை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அழகாக இயக்கி உள்ளார் இயக்குநர்.

அதேபோல் படத்தில் இசை மற்றும் ஒளிப்பதிவு என்பன காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

தொகுப்பு 

ஆகவே மொத்தத்தில் ஸ்வீட் காரம் காபி உங்களை ரசிக்க வைக்கும் ஒரு படமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement