• Sep 20 2024

பதைபதைக்கும் காட்சிகளுடன்... ஜெயம் ரவி மிரட்டும் 'இறைவன்'... திரைவிமர்சனம் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

முன்னணி இயக்குநர் ஐ. அஹமத் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் ஹரி கே. வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

அத்தோடு எக்சன் என்டர்படெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த திரைவிமர்சனத்தைப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் 'மனிதன் மிகவும் ஆபத்தான விலங்கு' என்ற கேப்ஷனுடன் படத்தினுடைய முதல் காட்சி தொடங்குகின்றது. இதை வைத்தே நாம் படத்தின் மொத்தக் கதையையும் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில் தப்பு பண்றவங்களை கடவுள் தண்டிக்கும் வரை காத்திருக்காமல் தன்னைத் தானே கடவுளாக நினைத்து என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் ஜெயம்ரவி வருகின்றார். அதேபோன்று தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டு கொலைகள் செய்யும் ஒருவராக ராகுல் போஸ் வருகின்றார். 

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் யுத்தமே இப்படத்தின் உடைய அடிப்படை கதையாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில் அடுத்தடுத்து இளம் பெண்கள் பலர் கொடூரமான முறையில் கண்களை பறித்தும், கால்களை அறுத்தும் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் கொலை செய்யப்படுகிறார்கள்.  

அதாவது இப்படியெல்லாம் பிரம்மா எனும் சைக்கோ கொலைகாரன் செய்யும் நிலையில், அந்நபரைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகளான அர்ஜூன்(ஜெயம்ரவி), மற்றும் அவருடைய நண்பர் ஆன்ட்ரூ டீம் முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் பிரம்மா சிக்க, ஆன்ட்ரூ உயிரிழக்கிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக போலீஸ் வேலையில் இருந்து அர்ஜூன் விலகிக் கொள்கின்றார்.

பின்னர் யாருமே எதிர்பாராதவிதமாக ஒரு கட்டத்தில் போலீசில் இருந்து தப்பிக்கும் பிரம்மா மீண்டும் முன்பை விட கொலைகளை கொடூரமாக  செய்கிறார். இந்தக் கொலையில் ஜெயம் ரவியை சுற்றியிருப்பவர்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை உள்ளது.

இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது..? இறுதியாக பிரம்மா சிக்கினாரா? எதற்காக இத்தனை கொலைகளை கொடூரமாக செய்தார்? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக இறைவன் படத்தின் மீதிக் கதை அமைந்துள்ளது. 


நடிகர்களின் நடிப்பு 

அனைவரின் நடிப்பும் பாராட்டக்கூடியதாக உள்ளது. அதிலும் குறிப்பாக அர்ஜூன் என்ற காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயம் ரவி ஒன் மேன் ஆர்மியாக படத்தை தாங்கி நிற்கின்றார். அதேபோன்று உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.

அதேபோன்று வில்லனாக வரும் ராகுல் போஸ் படம் பார்ப்பவர்கள் மனதில் பயத்தை வரவழைக்கின்றார். மேலும் ஸ்மைலி கில்லர் பிரம்மா என்ற அந்த  சைக்கோ கேரக்டரை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார். 

அதுமட்டுமல்லாது நயன்தாரா, சார்லி, நரேன், அழகம் பெருமாள், பகவதி பெருமாள், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரும் தமக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கசித்தமாக செய்துள்ளனர்.


பலம்

திரைக்கதை படத்திற்கு பலம் சேர்க்கின்றது. குறிப்பாக ரசிகர்களை நுனி சீட்டில் உட்கார வைத்துப் படம் பார்க்கின்றது. அதேபோல் இடைவேளை ட்விஸ்ட்டும் சரியாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையால் படம் முழுக்க மிரள வைக்கும் அளவுக்கு அசத்தியுள்ளார். 

அதேபோல் ஹரி கே.வெங்கடத்தின்  ஒளிப்பதிவும் அட்டகாசமாக உள்ளது.

பலவீனம் 

படமானது நீண்ட நேரம் படம் பார்க்கும் உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

மேலும் லாஜிக் இல்லாமல் இழுத்த பக்கமெல்லாம் கதை செல்வது போல் உள்ளது.

அதேபோன்று மற்ற படங்களை போலவே இப்படத்திலும் சைக்கோ கேரக்டரின் டார்கெட் இளம்பெண்கள் தான். 


தொகுப்பு 

மொத்தத்தில் மிரட்டலாகவும், பயத்தை தூண்டும் வகையிலும் வெளிவந்துள்ள இப்படத்தை குழந்தைகள், இதயம் பலவீனமானவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது.

Advertisement

Advertisement