இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதோடு வினாத்குமார் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தில் விஷாலுடன் எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அத்தோடு இயக்குநர் செல்வராகவனும் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஏற்கெனவே இப்படத்திலிருந்து 2பாடல்கள் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலையும் படக்குழு வெளியிட்டு உள்ளது. அந்தவகையில் 'அம்மா என்னும் மந்திரமே' என்ற பாடலை வெளியாகி உள்ளது. மதுரகவி எழுதியுள்ள இந்த பாடலை பாடகி சைந்தவி பாடியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..!
Listen News!