• Sep 20 2024

'வாரிசு' ட்ரைலர் தாமதத்திற்கான காரணம் என்ன... இணையத்தில் கசிந்த கிட்டத்தட்ட உறுதியான தகவல் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படமானது பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.


அந்த வகையில் டிசம்பர் 24ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள், 'வாரிசு' படத்தின் நாயகன் விஜய், இசையமைப்பாளர் தமன், நடிகை ரஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பிதந்திருந்தனர்.


அந்தவகையில் இன்னும் படம் ரிலீஸ் ஆக பத்து நாட்களை விட குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் தற்போது வரை வாரிசு ட்ரைலர் வெளியாகவில்லை. இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. வங்கி கொள்ளை மையப்படுத்திய கதை என்பதால் ட்ரைலரில் அதிகம் ஆக்ஷ்ன் காட்சிகளும், மாஸ் வசனங்களும் இடம்பெற்று ரசிகர்களை அதிகம் ஈர்த்து இருந்தது.


இதனைத் தொடர்ந்து வாரிசு ட்ரைலர் வெளியாமைக்கான காரணம் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது வாரிசு படத்தின் ட்ரைலர் துணிவு படத்தின் ட்ரெயிலருக்கு ஈடு கொடுக்கும் வகையிலும், பதிலடி கொடுக்கும் வகையிலும் வசனங்கள் இருக்க வேண்டும் என படக்குழு மும்முரமாக பணியாற்றி வருகிறதாம். அதனால் தான் ட்ரைலர் வெளியாக தாமதம் ஆகிறது எனக் கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement