• Sep 20 2024

ஆர்யாவை அடிச்சுத் தூக்கிய ஹிப்ஹாப் ஆதி... பட்டையைக் கிளப்பும் வசூல் நிலவரம் இதோ.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வீரன்'. ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். 


மேலும் இவர்களுடன் இணைந்து முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படம் வெளியான அதே தினத்தில் ஆர்யா நடித்த காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படமும் வெளியாகி இருந்தது. இப்படத்தை இயக்குநர் முத்துராமையா இயக்கியுள்ளார்.

இந்த 2படங்களுமே வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றுடன் 4நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில் வசூல் விபரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 


அந்தவகையில் வீரன் திரைப்படம் முதல் நாள் 1.3 கோடிகளும், இரண்டாம் நாள் 1.65 கோடிகளும், மூன்றாம் நாளான நேற்றைய தினம் 2 கோடிகளையும் வசூலித்துள்ளது. ஆகவே மொத்தமாக முதல் மூன்று நாள்களில் இந்தியா முழுவதும் வீரன் படம் 4.95 கோடிகள் வசூலித்துள்ளது.

அதேபோன்று காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படமானது முதல் நாள் 1.1 கோடிகளும், இரண்டாம் நாள் 1.22 கோடிகளும், மூன்றாம் நாள் 1.32 கோடிகளும் வசூலித்துள்ளது. நான்காம் நாள் 96 லட்சங்களைத் தோராயமாக வசூலித்துள்ளது. ஆகவே மொத்தமாக இதுவரை இந்தியா முழுவதும் 4.6 கோடிகளை வசூலித்துள்ளது.

எனவே இரண்டு படங்களையும் ஒப்பிட்டு நோக்கும் போது வீரன் படம் வசூலில் முன்னிலையில் இருப்பது தெளிவாகின்றது.

Advertisement

Advertisement