• Nov 17 2024

காவல் நிலையம் வரை சென்ற பஞ்சாயத்து... கணவன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ரச்சிதா... தினேஷ் அளித்த விளக்கம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இவர் 'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரில் நடித்த வேளையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே சில கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் தற்போது இருவரும் தனி தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கும் ரச்சிதாவுக்கும் இடையில் பிரச்னை உண்டானதில் ரச்சிதாவுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஜிஜிக்கும் பங்கு இருக்குமெனச் சந்தேகப்படுவதாக தினேஷ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறி இருந்தார்.


இதன்காரணமாக தினேஷ் மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்திருந்தார் ஜிஜி. இதனையடுத்து நேற்றைய தினம் அந்தப் புகாரின் பேரில் தினேஷிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதேநாளில் சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் கணவன் மீது ரச்சிதாவும் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.


இந்தப் புகார் குறித்த விசாரணைகளுக்காக நேற்று மாலை இவர்கள் இருவரும் மாங்காடு காவல்நிலையம் வரை சென்றிருந்தனர். இந்த விசாரணையில் தினேஷ் மீது ரச்சிதா சில காரணங்களைச் சொல்லி, அதன் காரணமாகவே பிரிய முடிவெடுத்ததாக கூறியிருக்கின்றார்.

அதில் முதலாவது காரணம் தனது பெற்றோரை தினேஷ் மதிப்பதில்லை என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கு தினேஷ் பதிலளிக்கையில் "இவங்களை நான் பிரிஞ்சு இருந்தபோதும் கூட, இவங்க பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துகொண்ட நாட்களில் ரச்சிதாவின் அப்பாவும் அம்மாவும் என்னுடன் பேசிட்டுதான் இருந்தாங்க. இந்த நிமிடம் வரை அவங்களுக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்னையுமில்லை. வேணும்னா இப்பக்கூட நீங்க அவங்ககிட்டக் கேட்டுக்கலாம்" எனப் போலீசிடம் தெரிவித்திருக்கின்றார்.


ரச்சிதா கூறிய இரண்டாவது காரணம், "எப்போதுமே தினேஷ் பணம்... பணம்..." என நச்சரிப்பார் என்பது தான். இந்தப் புகாருக்கு தினேஷ் பதிலளிக்கையில் "நாங்க கணவன் மனைவியா இருந்தோம். டிவியில எல்லாருக்கும் எப்பவும் வாய்ப்பு அமையாது. எனக்கு வாய்ப்பு இல்லாத நாட்களில் வாடகை, இ.எம்.ஐ. கட்ட இவங்ககிட்ட காசு கேட்டிருக்கேன். மனைவிங்கிற முறையில் கேட்டேன்" எனக் கூறியுள்ளார்.

இவ்வாறாக இருவரையும் விசாரித்த போலீஸ் "ரச்சிதா தொடர்புடைய விஷயத்தில் தலையிடக் கூடாது" என தினேஷிடம் சொன்னார்கள். அத்தோடு "இனி அவருடன் சேர்ந்து வாழ சாத்தியமில்லை" எனச் சொன்ன ரச்சிதாவிடம் அப்படி விருப்பம் இல்லாவிட்டால் சட்டபூர்வமாக பிரிந்து கொள்ளுமாறும் கூறி இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறார்கள் போலீசார்.

Advertisement

Advertisement