நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் .
அந்தவகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படம் தொடர்பான தங்களது விமர்சனத்தை முன்வைத்து இருக்கின்றனர். அந்தவகையில் 'ஜெயிலர்' படமானது ரஜினியின்ஏனைய திரைப்படங்களைப் போல் அல்லாது நெல்சன் திலீப்குமாரின் ஸ்டைலான டார்க் காமெடியில் ரஜினியை பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாகவும் புதிதாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாது 'ஜெயிலர்' படத்தை பார்த்த ரஜினியும் படம் நன்றாக இருக்கிறது என்ற சந்தோஷத்திலும், திருப்தியிலும் இருக்கின்றாராம். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!